ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எளிதில் வெற்றி பெற்றது.

39
Advertisement

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

இதில் முதலில் ஆடிய ஐதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, 18.4 ஓவர்களில் இலக்கை எட்டி எளிதில் வெற்றி பெற்றது. சென்னை அணியில் சிறப்பாக ஆடிய டெவான் கான்வே 57 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி, 8 புள்ளிகளுடன், ஐ.பி.எல் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.