நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

296

கொரோனா முதல் அலையின் போது, ஊரடங்கு சட்டத்தை மீறி, பிரதமரின் அலுவலக இல்லத்தில் 100க்கும் மேற்பட்டோரை அழைத்து போரிஸ் ஜான்சன் விருந்து நடத்தினர்.

இதற்கு கண்டனம் எழுந்ததால், தவறுக்கு போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கோரினார்.

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் பிலிப்பின் இறுதி சடங்கின் போது, பிரதமர் அலுவலக நிர்வாகிகள் மது விருந்து நடத்தியது, மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த இரு விவகாரங்களை முன் வைத்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எதிராகநம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்தநிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் வெற்றிபெற்றார்.