வெளியானது இளைய தளபதி விஜயின் பீஸ்ட் ட்ரைலர்

534
Advertisement

சன் பிக்ச்சர்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் இளைய தளபதி விஜய் ,பூஜா ஹெட்ஜ் நடிப்பில் வெளிவரவுள்ள பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.கோலமாவு கோகிலா ,டாக்டர்’ போன்ற படங்களின் ஹிட்டுக்கு பிறகு இயக்குனர் நெல்சன், விஜய்யுடன் இணைகிறார் என்ற செய்தி வெளியானது முதல் டிரெய்லர் வெளியாகும் இன்றைய நாள் வரை ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறி வருவதை நம்மால் பார்க்க முடிந்தது.முன்னதாக வெளியான 2 பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்க ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் பல்ஸை எகிறவைத்துள்ளது.