பீஸ்ட் படத்தின் இரண்டாவது பாடல் ‘ஜாலியோ ஜிம்கானா’ வெளியீடு

353
Advertisement

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ’பீஸ்ட்’ வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது . ’அரபிக்குத்து’ பாடலானது பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகி இதுவரை 197 மில்லியன் பார்வைகளுக்கு மேல் கடந்து சாதனை படைத்துள்ளது.தற்போது ’பீஸ்ட்’ படத்தின் இரண்டாவது பாடல் ‘ஜாலியோ ஜிம்கானா’ வெளியாகியுள்ளது.’ஜாலியோ ஜிம்கானா’ வெளியான சில நிமிடங்களிலேயே 1 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.