” பீஸ்ட் ” படத்தில் விஜய் பாடிய பாடல் ரிலீஸ் தேதி !

401
Advertisement

விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு பிறகு , நெல்சன் – விஜய் கூட்டணியில் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் படம் ” பீஸ்ட் “. இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

முன்னதாக , இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. இந்நிலையில் ‘பீஸ்ட்’ படத்தின் அரபிக்குத்து பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆன நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் வரும் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாடலை விஜய்யே பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பீஸ்ட் படத்தின் இந்த அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகிறது.