பகீர் செய்தி! ஜப்பான் பிரதமர் மீது குண்டு வீச்சு! அடுத்து நடந்த பேரதிர்ச்சி! 

175
Advertisement

கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று ஜப்பான்.. தீவு நாடான ஜப்பானின் பிரதமராக ஃபுமியோ கிஷிடா பதவி வகித்து வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு அப்போது பிரதமராக இருந்த ஷின்சோ அபே தனது பதவியை ராஜினமா செய்தார். இதையடுத்து ஜப்பானின் புதிய பிரதமராக ஃபுமியோ கிஷிடோ பதவியேற்றார். இந்த சூழலில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஷின்சோ அபே நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது ஷின்சோ அபேவை முன்னாள் கடற்படை வீரர் ஒருவர் சுட்டுக்கொன்றார். உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை இந்த சம்பவம் ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், ஜப்பானில் மீண்டும் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் விதமாக ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் அவரை நோக்கி வெடி குண்டு வீசப்பட்டுள்ளது.