அட்டகாசமான KGF Chapter 2 அப்டேட்

328
Advertisement

பிரபல இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் கே.ஜி.எஃப் : சாப்டர் 1, இந்தப் படத்திற்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் கே.ஜி.எஃப். : சாப்டர் 2 என்ற பெயரில் தயாராகியுள்ளது.


கடந்த ஆண்டு ஜனவரி மாதமே “கே.ஜி.எஃப். : சாப்டர் 2” திரைப்படம் ஜுலை 16-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா இரண்டாம் அலை தீவிரமானதால், பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, திரையரங்குகள் மூடப்பட்டதால், படத்தை திட்டமிட்டப்படி ரிலீஸ் செய்ய முடியாத சூழல் உருவானது.இந்தப்படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீணா தாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரடெக்ஷன் பணிகளும் ஏறக்குறைய முடிந்துள்ளதால், கே.ஜி.எஃப். : சாப்டர் 2 படத்தை வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் ,’கே.ஜி.எஃப். : சாப்டர் 2 படத்தின் டிரைலர் மார்ச் 27 ந் தேதி மாலை 6.40 மணிக்கு வெளியாகும் என்ற ஒரு அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

முதல் பாகத்தில் மெர்சல் காட்டி மிரட்டி இருந்த யாஷின் அட்டகாசமான நடிப்பை காண உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார். முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகம் வேறலெவலில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.