- ஆஸ்திரேலிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் கடந்த 21ந்தேதி நடைபெற்றது.
லிபரல் கட்சி தலைவர் ஸ்காட் மோரிசன் மற்றும் தொழிலாளர் கட்சி தலைவர் அந்தோணி நார்மன் அல்பேனீஸ் இடையே கடுமையான போட்டி நிலவியது.
இதில் அதிக இடங்களை கைப்பற்றிய அந்தோணி நார்மன் அல்பேனீஸ் பிரதமராக தேர்வானார்.
இதனையடுத்து, அவர் ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக கேன்பர்ரா நகரில் உள்ள அரசு இல்லத்தில் பதவியேற்று கொண்டார்.
அந்தோணி நார்மன் அல்பேனீஸ் தொழிலாளர் கட்சியை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்று கொண்டனர்.
அவருக்கு கவர்னர் ஜெனரல் டேவிட் ஹர்லி பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
அந்தோணி நார்மன் அல்பேனீஸ் ஆஸ்திரேலியாவின் 31வது பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.