ருதுராஜ் ஜடேஜாலாம் செட்டாகாது தேனிக்குப் பிறகு சி.எஸ்.கே கேப்டனாக இவரை நியமியுங்கள் அக்ரமின் கருத்து..!

148
Advertisement

ஐ.பி.எலின் தொடக்கத்தில் சி.எஸ்.கே அணியின் பவுலிங்கில் பல பிரச்சனைகள் இருந்தது,

ஆனால் தற்போது ஒவ்வொரு பிரச்சனைகளையும் தோனி கொஞ்சம் கொஞ்சமாகச் சரி செய்து வருகிறார். ஆனால் இதுதான் தனது கடைசி ஐ.பி.எல் என்று தோனியே சில போட்டிகள் முடிந்த பிறகு தொகுப்பாளர்களிடம் ஒளிவு மறைவாகப் பேசியுள்ளார்.

எனவே தோனிக்கு பிறகு சி.எஸ்.கே கேப்டன் யார் என்ற பெரிய கேள்வியுள்ளது. ஆனால் சி.எஸ்.கேவும் சில வருடங்களாக அதற்கான சோதனைகளைச் செய்து தான் வந்துள்ளார், ஆனால் முன்னால் பாக் ஜாம்பவான் வீரர் வாசிம் அக்ரம் ராஹானேவை கேப்டனாக தேர்வு செய்துள்ளார்.

முன்னதாக ஜடேஜா கேப்டனாக செயல்பட்டார், ஆனால் அவருக்கு கேப்டன் பதவி செட்டாகவில்லை, அதுபோல ருத்துராஜ் அடுத்த கேப்டன் என்று பல விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள் இருப்பினும் அவருக்கு அனுபவம் பெரிய அளவில் இல்லை, ஆனால் புதுவரவான ராஹானே மிக சிறப்பாக கேப்டனாக இருப்பார் என்று அக்ரம் பேட்டியில் பேசியுள்ளார், இந்திய அடுகளங்கள் குறித்து நல்ல அறிவாற்றலை கொண்டுள்ளார் ராஹானே, அதுபோல தோனி போன்று மிகவும் பொறுமையாகச் செயல்படக் கூடியவர்.

மேலும் கேப்டன்சி அனுபவத்தையும் கொண்டுள்ளவர், எனவே தோனி ஓய்வு பெற்ற பின் சென்னையை வழி நடத்துவதற்கு ரகானே மிகச் சிறந்த தேர்வாக இருப்பார். இது பற்றி சென்னை பிரத்தியேக திட்டத்தை வைத்திருக்கலாம் என்று அக்ரம் கூறியுள்ளார்.  எனவே ரகானே சென்னை அணியின் அடுத்த கேப்படன் ஆனால் சரியாக இருக்குமா என்பதை கமெண்டில் சொல்லுங்கள்.