பிரசாந்த் நடித்துள்ள ‘அந்தகன்’ படத்தின் அப்டேட்

487
Advertisement

இந்தியில் வெளிவந்த ‘அந்ததுன்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ‘அந்தகன்’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்தபடத்தில் நடிகர் பிரசாந்த் கதாநாயகனாகவும் ,நடிகை பிரியா ஆனந்த் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர் . இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தை இயக்குனர் தியாகராஜன் இயக்குகிறார். சிம்ரன், சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் கலைப்புலி தாணு இந்த படத்தின் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதில் ‘பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் திரைப்படம் உலகளவில் வெளியாகும் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று கூறியுள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் அந்தகன் திரைப்படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.