நடக்கும் மீன்கள் நிறைந்த ஆச்சரியத் தீவு..JAMES BONDஇன் பெயர் வைக்கப்பட்ட விநோத காரணம்!

227
Advertisement

இயற்கை எழில் கொஞ்சும் அடர்ந்த வனங்கள், உயர்ந்த மலைப்பகுதிகள் மற்றும் கடற்கரை எல்லாம் ஒரே இடத்தில் அமைந்திருந்தால் எப்படி இருக்கும் என கேட்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது தாய்லாந்தின் பாங் நாகா பே தீவு.

இந்தத் தீவில் நிலத்தில் நடக்க கூடிய ஹோகி வகை மீன்களை பார்க்க முடியும்.

1974ஆம் ஆண்டு இந்த தீவில், ஹாலிவுட்டின் ஆகச்சிறந்த action படத் தொடரான James Bondஇன் ‘The Man With The Golden Gun’ படம் எடுக்கப்பட்டது. அதன் பிறகு, இந்த தீவு James Bond தீவு என்றே அழைக்கப்படுகிறது.

அதற்கு முன், வெளிநாட்டு மக்கள் அரிதாகவே வரும் பழங்குடி தீவாக கருதப்பட்ட இந்த இடம் தற்போது சர்வதேச புகழ் பெற்று, உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.

அரிய வகை தாவரங்களும் உயிரினங்களும் வாழ்விடமாக கொண்டுள்ள இத்தீவில் 26 வகையான ஊர்வன விலங்குகள், 24 வகையான மீன்கள், 14 வகையான இறால் வகைகள், 15 வகையான நண்டுகள் பிரத்யேகமாக கண்டறியப்பட்டுள்ளன. பாரம்பரியமாக இந்த தீவில் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்கள் பல தனித்துவமான கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். மேலும், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க படகுப் போட்டிகள் உள்ளிட்ட சுவாரஸ்ய நிகழ்வுகளும் நடப்பது குறிப்பிடத்தக்கது.