சத்தியம் தொலைக்காட்சியின் “Friday For Farmers” இயக்கத்தின் செய்தி எதிரொலியாக, நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை தடுக்க, பயோமெட்ரிக் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது….

111
Advertisement

தமிழகம் முழுவதும் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு இழைப்படும் அநீதியை சத்தியம் தொலைக்காட்சியின் “Friday For Farmers” இயக்கம் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது.

விவசாயிகளிடம் மூட்டைக்கு 50 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதையும், வியாபாரிகளின் நெல்மணிகளை கொள்முதல் செய்வதில் முன்னுரிமை அளிக்கப்படுதையும் சத்தியம் டிவி தொடர்ந்து செய்தியாக வெளியிட்டு வருகிறது. இந்நிலையில்,

தமிழகம் முழுவதும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நேற்று முதல் பயோ மெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகள் நெல் விற்பதை தடுக்க, பயோ மெட்ரிக் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக உணவுத்துறை தெரிவித்துள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் லஞ்சம்

வாங்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நெல் கொள்முதல் செய்யப்படும் விவசாயிகளுக்கு உடனே பணம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பயோ மெட்ரிக் முறையால் விவசாயிகள் பயன்பெறுவார்கள் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.