வைரலாகும் அஜித்தின் ” நன்றி கடிதம் “

337
Advertisement

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக அஜித் 61 என்ற படத்தை வினோத் இயக்க உள்ளார். இந்தப் படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார்.

விரைவில் இப்படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், கேரளா சென்றுள்ள அஜித் , அங்குள்ள கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தபொது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகியது.

இந்நிலையில், நடிகர் அஜித் தன் கையால் எழுதிய ” நன்றி தெரிவிக்கும் ” கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது .

அதில் , தனக்கு கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உன்னி கிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணதாஸ் இருவரும் நன்றி கூறி, இந்த கடிதத்தை எழுதியுள்ளார் அஜித். மேலும், அவர்களுடைய, குரு க்ரிப்பா டீமுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். இந்த கடிதம் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது..