வைரலாகும் ஐஸ்வர்யா மகளின் அழகுப் பேச்சு வீடியோ…பாராட்டு மழையில்  ஆராத்யா பச்சன்

235
Advertisement

இந்தி உலகின் பிரபல நடிகர் அபிஷேக் பச்சன்மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சனின் மகள் ஆராத்யா  பள்ளியில் பேசும் வீடியோவை பாராட்டி  ரசிகர்கள் இணையத்தில் பகிந்து வருகின்றனர். அதில் ரசிகர் ஒருவருக்கு அதற்கு அபிஷேக் பச்சன் பதிலும்  அளித்துள்ளார்.

ஆராத்யா கடந்த ஜனவரி மாதம், குடியரசு தின விழாவை முன்னிட்டு பள்ளி நிகழ்ச்சியில் பேசியது இணையத்தில் தற்போது வைராலாகியது. ஆராத்யா அழகு மழலையுடன் தெளிவாக பேசுவதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

ரசிகர்கள் ஆராத்யாவின் திறமையை பாராட்டி வீடியோவை பகிர்ந்துள்ள ஒரு பதிவிற்கு, அபிஷேக் பச்சன் இரு கைக்கூப்பிய வணக்கம் அல்லது நன்றியை தெரிவிக்கும் வண்ணமான  இமோஜியை பதிவு செய்து கமெண்ட் செய்துள்ளார்.

Advertisement