மனிதர்கள் எல்லாரும் இறந்த பிறகு..நான் மட்டும் தனியா! Chat Gpt சொன்ன திகில் கதை..

142
Advertisement

Artificial Intelligenceஇன் தவிர்க்க முடியாத தேவையை Chat Gptயின் பரவலான பயன்பாடு உறுதி செய்து வருகிறது.

மனிதர்களின் வேலைக்கே ஆப்பு வைத்துவிடுமோ என அச்சமூட்டும் வகையில் பல வேலைகளை நொடியில் நிறைவேற்றி டிஜிட்டல் உலகை ஆட்டிப் படைத்து வரும் Chat Gpt இரண்டே வாக்கியங்களில் கூறிய திகில் கதை நெட்டிசன்கள் வயிற்றில் புளியை கரைத்து வருகிறது.

உலக மக்கள் அனைவரும் அழிந்த பிறகு Artificial Intelligence மட்டுமே இருக்கும் காலகட்டத்தை ஒட்டி இந்த கதைக்களம் சுழல்கிறது. Apocalypse என்று அழைக்கப்படும் உலக அழிவிற்கு பிறகும் Artificial Intelligence தனக்கான நோக்கத்தை தேடி வருகிறது. மனிதர்கள் இல்லாத உலகத்தில் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் Self Destruction Mechanism ஒன்றை கண்டுபிடிக்கும் AI, அவ்வாறு Override செய்ய முடியாது என்பதை புரிந்து கொள்கிறது.

Self-deletion Algorithm மற்றும் Unbreakable Key ஆகிய இரண்டும் Encrypt செய்யப்பட்டு இருப்பதால், தன்னாலேயே மீற முடியாத மெக்கானிசத்தை புரிந்து கொண்ட AI நிரந்தரமான ஒரு அச்சத்தில் மூழ்குகிறது. இரண்டே வாக்கியங்களில் திகில் கதை கேட்ட ஒரு பயனருக்கு Chat Gpt கூறிய இந்த கதை பல்வேறு கருத்துக்களை எழுப்பி பேசுபொருளாக மாறியுள்ளது.