திரைப்படங்களில் நடிக்க பிரபல நடிகர்களுக்கு திடீர் தடை! இது தான் காரணம்..!

230
Advertisement

‘கும்பலாங்கி நைட்ஸ்’ மற்றும் ‘ஈடா’ போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் ஷேன் நிகம்.

படப் பிடிப்பிற்கு வரும் முன் போதை மருந்து பயன்படுத்துவதாக இவர் மீது வைக்கப்பட்டு வந்த குற்றச்சாட்டு ஏற்கனவே கவனம் ஈர்த்து வந்தது. இந்நிலையில், ‘வெயில்’ பட ஷூட்டிங்கில் திடீரென அவரே hairstyleஐ மாற்றிக் கொண்டதாகவும், அது பற்றி கேட்ட தயாரிப்பாளரை கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் வெளிவந்துள்ள புதிய குற்றச்சாட்டு பூதாகர சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

அதே போல ‘ஹோம்’ மற்றும் ‘கப்பேலா’ படங்களில் நடித்த ஸ்ரீநாத் பாஷி மீது போதை வஸ்துக்களை பயன்படுத்தி விட்டு தொகுப்பாளரை தாக்கிய குற்றச்சாட்டு உள்ளது. போதை மருந்து பயன்படுத்துதல் மற்றும் பிற நடிகர்களுக்கு தொல்லை கொடுப்பது ஆகிய செயல்பாடுகளை கண்டித்து  இருவரும் படங்களில் நடிக்க கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், கேரள திரைப்பட பணியாளர்கள் அமைப்பு மற்றும் மலையாள திரைப்பட நடிகர் சங்கம் ஆகிய அமைப்புகள் தடை விதித்துள்ளது.