இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை மீட்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் தழுவிய போராட்டம் நடத்தப் போவதாக மீனவர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது…

106
Advertisement

ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தில் மீனவர் சங்க அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை ராமநாதபுரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழக மீனவர்களின் நூற்றுக்கணக்கான படகுகள்  இலங்கை கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளை மீட்க மாநில அரசுகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். மேலும், கோரிக்கைகள் மீது 10 நாட்களில் நடவடிக்கை எடுக்கவிட்டால் தமிழகம் தழுவிய போராட்டங்கள் நடத்த போவதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.