8 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு

256

இலங்கையில் மேலும் 8 புதிய அமைச்சர்களுக்கு அதிபர் கோத்பய ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

விவசாயம், வனவிலங்குத்துறை  அமைச்சராக மகிந்த அமரவீரரும், ஊடகம் போக்குவரத்துறை  அமைச்சராக பந்துல குணவர்தனவும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

கடல் தொழில் அமைச்சராக  டக்ளஸ் தேவானாந்தாவும்,  விளையாட்டு இளைஞர் நலத்துறை அமைச்சராக அனுருத்த ரணசிங்கேவும் பொறுப்பேற்றுக்கொண்டனர். 

கைத்தொழில் அமைச்சராக ரமேஷ் பத்திரன பதவி ஏற்றுக்கொண்டார்.

நீர்வளத்துறை  அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெல்ல,  மத மற்றும் கலாசார விவகாரத்துறை அமைச்சராக  விதுர விக்ரமநாயக்க, மற்றும்  அஹமட் நசீர் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பதவி ஏற்றுக்கொண்டனர்.