6 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய திரைப்படம் … முதன்முறையாக ஆஸ்கர் வென்று சரித்திரம் படைத்த பாகிஸ்தான் நடிகர்

939
Advertisement

திரைப்பட உலகின் மிகப்பெரிய கவுரவமாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. ஆண்டுதோறும் ஆஸ்கர் விருது வழங்கும் விருது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடப்பாண்டிற்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் டூன் திரைப்படம் சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த எடிட்டிங், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த வி.எப்.எக்ஸ்., சிறந்த இசை உள்ளிட்ட 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருதை குவித்துள்ளது. டூன் திரைப்படம் 10 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு நாமினேஷன் ஆகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த அனிமேஷன் திரைப்படமாக என்சாண்டோ வெளியாகியுள்ளது. கோடா படத்தில் நடித்ததற்காக சிறந்த துணைநடிகர் விருதை ட்ரோ கோட்சர் வென்றுள்ளார்.

சர்வதேச அளவில் சிறந்த திரைப்படமாக “டிரைவ் மை கார்” என்ற திரைப்படம் தேர்வாகியுள்ளது. சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை அரியானா டிபோஸ் வென்றுள்ளார். பிரிட்டன் வாழ் பாகிஸ்தான் நடிகர் ரியாஸ் அகமது ஆஸ்கார் விருதை வென்றுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகர் ஒருவர் ஆஸ்கர் விருதை வெல்வது இதுவே முதன்முறை ஆகும்.