“பேச்சுவார்த்தை மூலம் தான் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும்”

226

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் முக்கிய நகரான மரியுபோலை ரஷ்ய ராணுவம் முழுமையாக கைப்பற்றியது.

இதனிடையே உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், உக்ரைன் போரில் ரத்தக்களறி ஏற்படுகிறது என்றும் தாக்குதல் தொடர்கிறது எனவும் வேதனை தெரிவித்தார்.

போர் தொடர்பாக உக்ரைன் – ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது என்றும் இருப்பினும் பேச்சுவார்த்தை மூலம் தான் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே ஒரு அங்குல நிலத்தை கூட ரஷ்யாவிற்கு விட்டு தரக்கூடாது என போலந்து அதிபர் ஆண்ட்ர்செஜ் துடா தெரிவித்துள்ளார்.

உக்ரைன் சென்ற போலந்து அதிபர், ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார்.

அப்போது தனது எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமை உக்ரைனுக்கு மட்டுமே உண்டு என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், “ரஷிய அதிபருக்கு உக்ரைன் அடிபணிய வேண்டும் என்று கவலைக்குரல்கள் கூறுகின்றன. ஆனால் அந்த குரல்களுக்கு உக்ரைன் செவிசாய்க்கக்கூடாது.

ஏனென்றால் உக்ரைனின் ஒரு அங்குல நிலத்தை விட்டுக்கொடுத்தாலும் அது ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளுக்கு விழுகிற அடியாக அமையும்” என குறிப்பிட்டார்.