+2 ரிசல்ட், குழப்பமா திடீர் தாமதத்தால் அதிர்ச்சி !

28
Advertisement

கடந்த மூன்று வாரங்களாக நடந்து வந்த பிளஸ் 2 பொது தேர்வு இன்றுடன் முடிகிறது.. இதையடுத்து, ரிசல்ட் எப்போது வெளியிடப்படும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு கடந்த 13ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.. தொடர்ச்சியாக ஒவ்வொரு பாடப் பிரிவினருக்கும் தேர்வு நடத்தப்பட்டு, இன்றைய தினம் அதாவது, ஏப்ரல் 3-ந் தேதி வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் ஆகிய தேர்வுகளுடன் பிளஸ்-2 பொதுத்தேர்வு நிறைவு பெற இருக்கிறது.

சரியாக, 49,559 மாணவர்கள் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. அதேபோல, தனித்தேர்வர்களில் மொத்தம் 8,901 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 7,786 மாணவர்கள் தேர்வெழுதினர். 1,115 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் என்று, 8.75 லட்சம் பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் சராசரியாக, 50 ஆயிரம் பேர் தேர்வுக்கு வராமல், ஆப்சென்ட் ஆனது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ..