ரஷ்யாவில் நின்று கொண்டிருந்த மினி பஸ் மீது லாரி மோதி விபத்து – 16 பேர் உயிரிழப்பு.

318

ரஷ்யாவில் நின்று கொண்டிருந்த மினி பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். ரஷ்யாவின் உல்யனோவ்ஸ்க் நகரில் சாலையோரத்தில் மினி பஸ் நின்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி , ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மினி பஸ் மீது மோதியது. இந்த கோர விபத்தில் 16 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில், 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கோர விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.