படகு கவிழ்ந்து 14 பேர் பலி

308

மியான்மரின் சிறுபான்மை இன மக்களான ரோஹிங்யா முஸ்லிம்களை அந்த நாட்டு ராணுவம் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒடுக்க தொடங்கியது.

இதன் காரணமாக ரோஹிங்யா முஸ்லிம்கள் உயிர்பிழைக்க வேண்டி வங்காளதேசம், மலேசியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

இந்த நிலையில் மியான்மரின் ரக்கினே மாகாணத்தை சேர்ந்த 60-க்கும் அதிகமான ரோஹிங்யா முஸ்லிம்கள் மியான்மரில் இருந்து மலேசியாவுக்கு தப்பி செல்வதற்காக படகு ஒன்றில் புறப்பட்டனர்.

இந்த படகு மியான்மரின் மேற்கு பகுதியில் உள்ள பத்தேய்ன் நகருக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்ந்தது.

இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர்.

இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினர் மீட்பு படகுகளில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

எனினும் 14 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது.

அதே சமயம் நீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 35 பேரை மீட்பு குழுவினர் மீட்டனர்.