பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கட்டாய கடமைகள்

1030
Advertisement

பிள்ளைகளின் மகிழ்ச்சியான எதிர்காலத்திற்குக் கடுமையாகப் பாடுபடுகிறார்கள் பெற்றோர்கள், எனவே அவர்களின் நலனுக்காக ஒரு சில விஷயங்களை அவர்களது பிள்ளைகள் செய்வது அவசியமாகும் , அந்த வகையில் பெற்றோருக்காகப் பிள்ளைகள் செய்ய வேண்டிய விஷயங்கள், என்னவென்று இத்தொகுப்பில் பார்க்கலாம், 

நீங்கள் எவ்வளவுதான் வளர்ந்தாலும் உங்கள் பெற்றோருக்கு நீங்கள் பிள்ளைகள்தான், எனவே உங்கள் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் சரியாகச் செய்து முடிக்க வேண்டும்.  

சமயத்தில் நீங்கள் செய்யும் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்க என்றும் தயங்காதீர்கள், நான்தான் அனைத்தும்  அறிந்தவன் என்று உங்கள் பெற்றோர் முன்பு ஆவணம் காட்டுவது நல்லதில்லை, 

மாறிவரும் நவநாகரீக உலகில் நீங்கள் கற்ற அனைத்தும், உங்கள் பெற்றோர் அறிய வாய்ப்பில்லை , எனவே காலத்தை அறியாமல் உங்கள் பெற்றோர் செய்யும் சிறு சிறு தவறுகளை மன்னிக்க கற்றுக் கொள்ளுங்கள்.

பெற்றோர்களின் முதுமை காலத்தில் முடிந்தவரை அவர்களுடன், நேரத்தைச் செலவிடுங்கள், முதுமை காலத்தில் பெற்றோர்களைப் பிரிந்து வாழ்வது நல்லதில்லை. 

முதுமையில் இருக்கும் பெற்றோர்களை இதைச் செய்யாதே அதைச் செய்யாதே, என உங்கள் பெற்றோருக்குக் கட்டளை இடாதீர்கள், இவ்வாறு செய்வது சிறுவயதில் உங்களைக் கண்டித்த பெற்றோர்களைப் பழிவாங்குவதற்குச் சமமாகும் மாறாக அன்பாக சொல்லிப் புரிய வைக்கலாம். 

தங்களின் தேவைக்காகப் பெற்றோர், உங்களிடம் கை ஏந்தி நிற்கும் நிலைக்குக் கொண்டு செல்லாதீர்கள், எனவே அவர்களின் தேவையை அவர்களே பார்த்துக்கொள்ளும் வழிகளை ஏற்படுத்திதாருங்கள்.

உங்களது வாழ்க்கையில் எடுக்கக் கூடிய முக்கிய விஷயங்கள் மற்றும் முடிவுகளை உங்களது பெற்றோரிடம் ஆலோசித்துப் பேசி முடிவெடுப்பது நல்லது

பெற்றோர் உங்களிடம் எதிர்பார்ப்பது சொத்தோ, பணமோ இல்லை அன்பு மட்டும்தான், எனவே அவர்களிடம் நாளுக்கு ஒருமுறையாவது அன்பாகப் பேச முயற்சிசெய்யுங்கள், இதுவே உங்களை ஆளாக்கி வளர்த்த பெற்றோர்களுக்கு நீங்கள் செய்யும் கைமாறு.