சென்னை, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை நடைபெறுகிறது. பொதுவாக மெட்ரோ ரயில்கள் பூமியின் கீழே சுரங்கப் பாதை அமைத்தும், உயர் மட்டத்தில் தடம் அமைத்தும் செல்கின்றன. இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தாவில் இருந்து ஹவுராவுக்கு மெட்ரோ இயக்குவதற்காக ஹூக்ளி ஆற்றின் கீழே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு ஆற்றின் கீழே சுரங்கப்பாதை அமைத்து மெட்ரோ ரயில் இயக்குவது இதுதான் முதல் முறை ஆகும். கொல்கத்தாவின் மகாகரன் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து ஹவுரா மைதான மெட்ரோ ரயில் நிலையம் வரையில் இந்த சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
நாட்டிலேயே முதல்முறையாக ஆற்றின் கீழே ஓடிய மெட்ரோ ரெயில்..!
Advertisement