சிவகார்த்திகேயனின் புதிய வீடு

494
Advertisement

டாக்டர் படத்திற்குப் பிறகு மீண்டும் தனது சினிமா மார்க் கெட்டை நிலை நிறுத்திய சிவகார்த்திகேயன், தனது 20வது படத்தைத் தெலுகு இயக்குநர் அனுதீப் இயக்குகிறார், இந்தப் படத்துடைய பூஜை சமீபத்தில் நடந்து ,படப்பிடிப்பு துவங்கியுள்ளது,

இப்படம் மூலம் தெலுகில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார் சிவகார்த்திகேயன். மேலும் இப்படத்தில் நாயகியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரபோஷப்கா நடிக்கிறார், மேலும் அயலான் படத்தின் படப்பிடிப்பு முடிந்தநிலையில் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது படத்தின் கதாநாயகியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்க மேலும் இந்தப் படத்தின் இயக்குநராக இருக்கிறார் ரவிக்குமார், இவர் இன்று நேற்று நாளை படத்தை முன்னதாக இயக்கியுள்ளார், மேலும் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார், டான் படமும் ரீலீஸ்க்கு தயாராகவுள்ளது,

இவ்வாறு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், தனது சொந்த பூர்வீக கிராமமான திருவீழிமிழலையில், ஓர் அழகிய புதிய வீட்டைக் கட்டி உள்ளார், இவரது தாத்தாக்களான கோவிந்தராஜப் பிள்ளை, தட்சிணாமூர்த்தி பிள்ளை ஆகியோர் நாதஸ்வர கலைஞர்களாக இருந்தவர்கள் ,அவர்கள் வாழ்ந்த ஊரில் தான் தற்போது சிவகார்த்திகேயன் புதுவீடு கட்டி கிரக பிரவேசம் நடத்தி உள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.