சர்வாதிகாரம் இருந்தும் மகாராணியால் செய்ய முடியாத விஷயங்கள் 

296
Advertisement

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத், தனது 96 வயதில் காலமானார், அதிலும் பிரிட்டன் வரலாற்றில் நீண்ட காலம் ராணியாக இருந்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார், ஆனால் சர்வாதிகாரத்திலிருந்த  ராணி அவர்களுக்கும்,  சில விஷயங்களைச் செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை, அப்படிப்பட்ட சில விஷயங்களை இத்தொகுப்பில் பார்க்கலாம்.

ராணி எலிசபெத் தனது கணவர் பிலிப் அவர்களுடன், எங்குச் சென்றாலும் இரண்டடி முன்னால் தான் செல்லவேண்டும் என்ற அரச சட்டம் இருக்கிறது, 

அதுபோல ராணி எலிசபெத் எவ்விதமான தனிப்பட்ட கட்சிகளைச் சார்ந்து அல்லது ஆதரித்தோ பேசக்கூடாது, ராணி அவர்கள் எப்போதும் சமநிலையான கருத்தை மட்டுமே பேச அனுமதியுள்ளது. மேலும் ராணிக்கு ஓட்டுரிமை இல்லை.

மேலும் அவருக்குக் கால்மேல் கால் போட்டு உட்காருவதற்கு அனுமதி இல்லை, எப்போதுமே ராணியின் கால் தரையில் வைத்த படியே இருக்கவேண்டும் என்பது கட்டாயம். 

முக்கியமாக ராணி யாருக்கும் ஆட்டோகிராப் அதாவது வாழ்த்து கையெழுத்திட்டுத் தரக்கூடாது, ஏனெனில் ராணியின் கை எழுத்தை யாரும் தவறாக பயன்படுத்தக் கூடாது என்பதற்காகத்தான்.

ராணியின் மீது எந்த ஒரு குற்றச்சாட்டு ரீதியான வழக்கையும் பதிவு செய்ய முடியாது. ஏனெனில் அவர் அரசியல் சட்டங்களுக்கு அப்பால் பட்டவர். இவைகளே ராணிக்கு அனுமதி தரப்படாத விஷயங்கள்.