சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகும் ‘சிங் இன் த ரெயின்’ வடிவேலு வீடியோ

414
Advertisement

தமிழ் சினிமாவில் காமெடி லெஜெண்ட் என்று சொன்னால் அது வைகை புயல் வடிவேலு அவர்களை மட்டும் தான் குறிப்பிட முடியும் மேலும் இவருடைய காமெடி வசனங்கள் ,எப்போதும் மீம்ஸ் வழியாக ட்ரெண்ட் வருகிறது, இது போலவே நடனத்தில் லெஜெண்ட் என்று சொன்னால் அது இந்தியன் மைகேல் ஜாக்சன் பிரபு தேவாவை தவிற வேறு யாரையும் சொல்லமுடியாது, இப்போது சமிபத்தில் இருவரும் சேர்ந்து இருக்கும் ஒரு வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது ,

இவர்களின் கூட்டணியில் நிறைய காமெடி திரைப்படம் வந்துள்ளது , ‘மனதைத் திருடி விட்டாய்’, காதலன் ,ரோமியோ, லவ்போர்ட்ஸ் போன்ற படங்கள் இருவரின் காம்பினேஷன்ல நல்ல ஹிட் அடித்தது மற்றும் 90ஸ் கிட்ஸ்யின் favorite படங்கள் ஆகும், மேலும் இவர்களின் நடிப்பில் 2001ஆம் ஆண்டு வெளியான படம் ‘மனதைத் திருடி விட்டாய்’ அந்தப் படத்தில் பிரபுதேவா, வடிவேலு, விவேக் ஆகியோர் காமெடியில் கலக்கி இருப்பார்கள், இதில் ‘சிங் இன் த ரெயின், ஐ வான்ட் சிங் இன் த ரெயின்’, என்று வடிவேலு பாடி காமெடி செய்யும் காட்சிக்கு சிரிக்காத நபர்களே இல்லை ,

இந்நிலையில் பிரபுதேவா, வடிவேலு தற்போது சந்தித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் வடிவேலு ‘சிங் இன் த ரெயின்’ பாடலைப் பாடி, பிரபுதேவாவைக் கட்டிப் பிடித்து மகிழ்ந்துள்ளார், அந்த வீடியோவை பிரபு தேவா தனது ட்விட்டர் பக்கத்தில் நட்பு என்று பதிவிட்டு பல இதயங்களை பக்கத்தில் போட்டு இருந்தார். இந்த வீடியோ 9 லாசத்திற்கு மேலான பார்வையாளர்களை கவர்ந்து வைரல் ஆகி வருகின்றது.