கிரிக்கெட் வாழ்க்கையின் முடிவில் மோசமான சாதனைக்குப் போட்டி போடும் DK மிகவும் வருத்தத்தில் ரசிகர்கள்…!

140
Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பல வீரர்கள் பலவிதமான சாதனைகளைச் செய்து வருகிறார்கள்,

ஆனால் சில முக்கிய வீரர்கள் மோசமான சாதனையைச் செய்து வருகிறார்கள், அதில் ரோஹித் சர்மா அதிக முறை டக் அவுட் ஆனவர்கள் என்ற மோசமான சாதனையை ஏற்படுத்தினார், ஆனால் தற்போது தினேஷ் கார்த்திக் சர்மாவிற்கு போட்டியாகக் களமிறங்கியுள்ளார்.

மே 14ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டி,கே(DK) டக் அவுட் ஆனார், அதன் மூலம் ரோஹித் சர்மாவின் ரிக்கார்டை தினேஷ் கார்த்திக் சமன் செய்துள்ளார், ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் , இனி வரும் ஒவ்வொரு ஆட்டங்களும் மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டியாக மாறியுள்ளன.


2022 ஐ.பி.எலில் ஒரு ஃபினிஷராக எதிரணி பவுலர்களை விளாசி எடுத்தார் டி.கே, இதனால் இந்திய அணியில் கம் பேக் கொடுத்தார், ஆனால் இம்முறை இவர் பெட்டிப் பாம்பாய் அடங்கியிருப்பது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் நட்சத்திர வீரராகச் செயல்பட வேண்டாம், ஆனால் தொடர்ந்து டக் அவுட் ஆவதை நிறுத்த வேண்டும் இன்றைய போட்டியைச் சேர்த்து 16 ஆவது முறையாக ஐபிஎல் தொடரில் டக் அவுட் ஆகியுள்ளார்.

இதே மோசமான சாதனையை ஏற்படுத்தியிருக்கும் இன்னொரு நபராக ரோஹித் சர்மா இருக்கிறார். இவரும் 16 முறை டக் அவுட் ஆகியுள்ளார். இதற்கு அடுத்த இடத்தில் 15 முறை டக் அவுட் ஆனவர்களாக மன்தீப் சிங் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் உள்ளனர்.