வைரலாகும் யுவராஜ் சிங்கின் புதிய ஹேர் ஸ்டைல்

486
Advertisement

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தனது புதிய ஹேர் ஸ்டைல் தோற்றத்தை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அவரின் பதிவிற்கு பல பிரபலங்களும் கமெண்ட் செய்து வருகின்றார்கள்.

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதோடு, தான் என்ன செய்தாலும் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தும் விதம் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துவிடுவார்.

உதாரணமாக , அவர் தனது தாயை கேலி செய்வதில் இருந்து தனது மனைவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பது வரை தனது வாழ்க்கையின் பல்வேறு விஷயங்களைப் பற்றி பகிர்வதில் ஆர்வம் உள்ளவர்.

https://www.instagram.com/yuvisofficial/

தற்போது இன்ஸ்டாகிராமில் அவரின் சமீபத்திய பகிர்வில் , தனது புதிய ஹேர் ஸ்டைல்லை வீடியோவில் பகிர்ந்துள்ளார். அவரின் இந்த புதிய ஹேர் ஸ்டைல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.