ஈரானில் உரிமைகளை பாதுகாக்க போராடும் பெண்கள் – ஜோ பைடன் ஆதரவு

226

ஈரானில் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க போராடும் பெண்களுடன் அமெரிக்கா துணை நிற்கிறது என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஹிஜாப் சரியாக அணியவில்லை என போலீசார் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த மாஷா அமினிக்கு ஆதரவாக ஈரானில் போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், – ஈரானில் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க போராடும் பெண்களுடன் அமெரிக்கா துணை நிற்கிறது என்றும், ஈரானின் துணிச்சலான குடிமக்கள் தற்போது தங்கள் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க போராடுகிறார்கள் என்றும், ஈரானின் துணிச்சலான பெண்களுடன் அமெரிக்கா துணை நிற்பதாகவும் அவர் தெரிவித்தார்.