கேரளாவில் விஷம் கலந்த ஐஸ்கிரீம் கொடுத்து 12வயது சிறுவனை கொன்ற பெண் கைது செய்யப்பட்டார்.

168
Advertisement

கேரளா மாநிலம், கோழிக்காடு அருகே உள்ள கொயிலாண்டி பகுதியைச் சேர்ந்த முகமது அலி என்பவரது மகன் 6 ஆம் வகுப்பு படித்து வந்தான.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐஸ்கிரீம் சாப்பிட்ட சிறுவன், உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான. அவனது உடலை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். சிறுவன் சாப்பிட்ட ஐஸ்கிரீமை, முகமது அலியின் சகோதரி தாஹிரா வாங்கி கொடுத்ததும், அதில், அமோனியம் சல்பர் என்ற ரசாயனம் கலந்து இருந்ததும் தெரியவந்தது.

தாஹிராவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது குடும்பத்தகராறு காரணமாக, ஐஸ்கிரீமில் எலிபேஸ்டை கலந்து சிறுவனுக்கு கொடுத்ததை தாஹிரா ஒப்புக்கொண்டார். அதனையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.