2024இல் மோடியின் வாய்ப்பையும் பறித்துவிடுவாரா? அதிர்ஷ்டம் இல்லாதவரா அண்ணாமலை?

182
Advertisement

முன்னாள் எம்பி, எம்எல்ஏ மற்றும் அதிமுகவின் முன்னாள் உறுப்பினர் கேசி.

பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது அரசியல் கருத்துக்களை பதிவு செய்து வருவது வழக்கம். கர்நாடக மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து, நேற்று இவர் பதிவிட்ட ட்வீட் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதில், அதிர்ஷ்டம் இல்லாதவரா  அண்ணாமலை? கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். கர்நாடகாவில் தேர்தல் இணைப் பொறுப்பாளராக பொறுப்பேற்றார், ஆட்சி பறிபோனது.  தற்பொழுது தென் மாநிலங்களில் அதிகமாக முன்னிலைபடுத்தப்படுகிறார்.

அவர் தீவிரமாக களப்பணியாற்றி 2024-ல் மோடியின் ஆட்சியமைக்கும் வாய்ப்பை பறித்துவிடுவாரா? என அவர் பதிவு செய்துள்ள கருத்து அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.