சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெப்பம் கொளுத்தும் நிலையில், நெல்லை, கரூர், திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

144
Advertisement

நெல்லை மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதியடைந்து வந்த நிலையில், நேற்று திடீரென இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், மாலையில் மழை பெய்தது. நெல்லை மாநகர் பகுதிகளான பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, நெல்லை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளிலும், புறநகர் பகுதிகளான கிருஷ்ணாபுரம், முன்னீர்பள்ளம், ரெட்டியார்பட்டி, ராமையன்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியது. இந்த திடீர் மழையினால் வெப்பம் தணிந்துள்ளதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.