விஜய் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா?

199
Advertisement

நடிகர் விஜய் சினிமாவில் முன்னணி நடிகராகத் திகழ்ந்து வரும் நிலையில் அதேபோல் அரசியலிலும் உச்ச நட்சத்திரமாக விளங்க வேண்டும் என பலரும் விரும்புகின்றனர்.

ஆனால் விஜய்யோ தனக்கு அரசியல் மீது ஆர்வம் இல்லை எனவும், தான் அரசியலுக்கு வர மாட்டேன் எனவும் உறுதியாகத் தெரிவித்து விட்டார். இந்நிலையில் தற்போது பிரபல அரசியல்வாதியான நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் “தம்பி விஜய் அரசியலுக்கு வரணும், அவர் வரும்போது இன்னும் வலிமையாக இருக்கும், நாங்க ஓர் ஆளா எதிர்த்துச் சண்டையிட முடியல, அவர் வந்தா இன்னும் ஆதரவாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.