மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட ஒருபோதும் விட மாட்டோம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்…

130
Advertisement

மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட ஒருபோதும் விடமாட்டோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.

தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தூர்வாரும் பகுதிகளை ஆய்வு செய்த பிறகு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறினார்:- விவசாயிகளின் உரிமைகளை விட்டுக் கொடுக்காத அரசாக திமுக அரசு செயல்படும். விவசாயிகளுக்கு அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் விரைவாக நடைபெற்றன.

ரூ.5 கோடி செலவில் கால்வாய்களை தூர்வாரும் பணிகளை முடுக்கி விட்டுள்ளோம். 95 சதவீத தூர்வாரும் பணிகள் நிறைவு அடைந்து விட்டன. எஞ்சிய பணிகளும் ஓரிருநாளில் முடியும்.நடப்பாண்டில் டெல்டாவில் தூர்வாரும் பணிகளுக்காக 90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உழவர்களுக்கு கடன் மற்றும் இடுபொருட்கள் வழங்குவது நடந்து முடிந்துள்ளது. சென்ற ஆண்டுகளில் சாதித்துக் காட்டியது போல இந்த ஆண்டும் செய்து காட்டுவோம்.