“தண்ணீர் பஞ்சம் வருவதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம்”

333

திருவள்ளூர் மாவட்டம் வட பெரும்பாக்கத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட குடியிருப்புக்கு மின்இணைப்பு துண்டிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.

இந்த வழக்கு விசாரணையில் அதிகாரிகளின் அலட்சியத்தால்தான் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள  ஒரு கிராமத்தில் 6 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் விநியோகம் நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை தடுக்காத அதிகாரிகள் ஊதியம் பெறுவது எதற்காக என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதிகாரிகள் முறையாக பணியாற்றாமல் இருப்பதற்கு அரசுதான் காரணம் என்று கூறிய நீதிபதிகள், பெரும்பாலான அதிகாரிகள் லஞ்சம் பெறாமல், எந்த பணியும் செய்வதில்லை என்று தெரிவித்தனர்.

இதனையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.