விராட் கோலிக்கு 207 ரன்கள் இன்னும் தேவைபடுகிறது

299

சர்வதேச போட்டிகளில் இந்தியாவிற்காக அதிக ரன்களை விளாசிய இரண்டாவது  வீரர் என்ற பெருமையை எட்ட விராட் கோலிக்கு 207 ரன்கள் தேவைபடுகிறது.

நீண்ட நாட்களாக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வந்த விராட் கோலி, ஆசிய கோப்பை போட்டியின் போது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து பார்மிற்கு திரும்பினார். இது இந்திய அணிக்கு புது உற்சாகத்தை தந்துள்ளது. இந்நிலையில், இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 போட்டி, மொகாலியில் தொடங்கவுள்ளது. இதுவரை 468 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 24 ஆயிரத்து 2 ரன்களை குவித்துள்ளார்.

இந்தியாவிற்காக அதிக ரன்கள் குவித்த பட்டியலில் முதலில் சச்சின் டெண்டுல்கரும், இரண்டாவது இடத்தில் ராகுல் டிராவிடும் உள்ளனர். இதில் ராகுல் டிராவிட் 24 ஆயிரத்து 208 ரன்கள் அடித்துள்ளார். இவரது சாதனையை விராட் கோலி முறியடித்தால், இரண்டாவது இடத்திற்கு முன்னேறுவார். இதனால் ஆஸ்திரேலியா இந்தியா இடையேயான தொடரில் இந்த சாதனையை விராட் கோலி முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.