கர்நாடகா தேர்தலில் ரொம்ப பிஸி..! ஹெலிகாப்டரில் வலம்வரும் அண்ணாமலை..!

133
Advertisement

அண்ணாமலை உடுப்பி மாவட்டத்திற்கு கட்டுக்கட்டாக பணம் அடங்கிய பேக்  உடன் ஹெலிகாப்டரில் வந்ததாக காங்கிரஸ் நிர்வாகிகள் புகார் கூறிய நிலையில், நேரம் விரையத்தை குறைப்பதற்காகவே ஹெலிகாப்டரில் வந்ததாக அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் மற்றும் ஆளும்கட்சியாக இருக்கும் பாஜக வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை பிடித்தால் ஆட்சி அதிகாரத்தை பிடித்துவிடலாம் என  இரு தரப்பும் தீவிரமாக பிரச்சாரமும் மேற்கொண்டு வருகிறது. தென் மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலமான கர்நாடகவை தக்கவைக்க தீவிரமாக களம் இறங்கி வேலை செய்து வருகிறது.

இந்த நிலையில் கர்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளாரக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டுள்ளார். இருந்த போதும் கர்நாடகவில் பாஜகவை விட காங்கிரஸ் கட்சிக்கை வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.