வேலூர் மக்கள் ஒரு மாதத்திற்கு அவதிப்பட போறாங்க

294

வேலூர் மாவட்டம் காட்பாடி – சித்தூர் இடையேயான ரயில்வே மேம்பாலத்தில் பழுதுபார்க்கும் பணி நாளை முதல் தொடங்குகிறது.

இதனால், வேலூரில் இருந்து சி்த்தூர் செல்லும் வாகனங்கள், காட்பாடி, வி.ஐ.டி.வழியாக திருவலம் கூட்டு ரோடு வழியாக சித்தூர் செல்லவேண்டும்.

இதேபோல, கடலூர் நோக்கி செல்லும் வாகனங்கள், ராணிப்பேட்டை, ஆற்காடு, விளாப்பாக்கம்,  வழியாக செல்லவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் பல கிலோமீட்டர் சுற்றி வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ஒருமாத காலம் மேம்பாலம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலம் மூடப்படுவதால்  ஏற்படும், போக்குவரத்து பிரச்சனை குறி்த்து நமது செய்தியாளர் ப்ரீத்குமார் அளிக்கும் தகவலை இப்போது பார்ப்போம்.