வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

268

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் 62.57 அடியாக உள்ளது.

போதிய நீர் இருப்பு உள்ளதால் வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பெரியாறு பிரதான கால்வாய் பாசன நிலங்களுக்கு இன்று தண்ணீர் திறக்கப்பட்டது.

அணையில் இருந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்கள் தண்ணீரை திறந்து வைத்தனர்.

அணையில் இருந்து இன்று முதல் அடுத்த 45 நாட்களுக்கு தொடர்ச்சியாகவும், அதற்கடுத்த 75 நாட்களுக்கு முறைவைத்தும் என 120 நாட்களுக்கு, வினாடிக்கு 900 கனஅடி வீதம் மொத்தம் 6 ஆயிரத்து 739 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.