நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

102
Advertisement

தமிழகத்தில் கடந்த 19ம் தேதி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் இன்று 268 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது.

சென்னையில் 200 வார்டுகளில் பதிவான வாக்குகள், 15 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன.

Advertisement

முதல் சுற்று முடிவு, முன்னணி நிலவரம் காலை 10 மணிக்கு தெரிய வரும். மாநகராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி 4 இடங்களிலும் நகராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி 14 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.