UPSC தேர்வு – முதல் 4 இடங்களை பிடித்த பெண்கள்

404

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிக்கான தேர்வு முடிவுகள நேற்று வெளியிடப்பட்டது.

தேர்வு முடிவுகளை www. upsc.gov.in என்ற இணைதயளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

UPSC தேர்வில் 508 ஆண்கள், 177 பெண்கள் என மொத்தம் 685 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

பொதுப்பிரிவில் 244 பேரும், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினர் 73 பேரும், பிற்படுத்தப்பட்டவர்கள் 203 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பட்டியல் வகுப்பை சேர்ந்த 105 பேரும், பழங்குடியினர் 60 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.

UPSC தேர்வில் தேசிய அளவில் ஸ்ருதி சர்மா முதலிடத்தையும், அன்கீட்டா அகர்வால் 2வது இடத்தையும், காமினி சிங்லா 3வது இடத்தையும், ஐஸ்வர்யா வர்மா  4வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளனர்.

கோவை மாவட்டத்தை சேர்ந்த சுவாதி ஸ்ரீ என்ற மாணவி தமிழகத்தில் முதல் இடத்தையும், தேசிய அளவில் 42வது இடத்தையும் பிடித்துள்ளார்.

விவசாய துறையில் உள்ள நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு கொண்டு செல்வதே தனது குறிக்கோள் என்று சுவாதி ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

தேர்வு முடிவுகள் வெளியான 15 நாள்களுக்குள் UPSC இணையதளத்தில், தேர்ச்சி பெற்றவர்கள் பெற்ற மதிப்பெண்கள் வெளியிடப்படும்.

இதில் ரேங்க் அடிப்படையிலும், இடஒதுக்கீடு பட்டியல் அடிப்படையில் அவர்களுக்கு பணிகள் ஒதுக்கப்படும்.

இந்நிலையில், தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.