எதிரிகளை அழிப்போம் –
உக்ரைன் பெண்கள் சபதம்

285
Advertisement

தாய் நாட்டிற்காக போராளியாக மாறிய உக்ரைன் தாய்மார்கள் சபதம் ஏற்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையால் அந்நாட்டின் எதிர்காலத்தையே புரட்டி போட்டு உள்ளது.

சொந்த வீட்டை விட்டு , நாட்டை விட்டு அகதிகளாக வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர் உக்ரைன் மக்கள்.

இந்நிலையில் , தங்கள் குழந்தைகளை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பியுள்ள உக்ரைன் தாய்மார்கள் போர் வீரராக களத்தில் ஆய்தங்களை ஏந்தி நிற்கின்றனர்.

இணையத்தில் , சில தாய்மார்கள் போர் காலத்தில் இருந்து சபதம் ஏற்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் , ஏழு உக்ரைன் பெண்கள் இராணுவ உடையில் நிற்கின்றார்கள்.அதில் ஒரு பெண் கூறுகிறார்,

” நாங்கள் உக்ரைனிய பெண்கள் , நாட்டை பாதுகாக்க ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். எங்கள் குழந்தைகளை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்புவிட்டோம்.நமது தேசத்தின் நீதி நம்பகமான முறையில் பாதுகாக்கப்படுகிறது.

நங்கள் தற்போது எங்கள் நாட்டின் இராணுவத்தில் இணைந்து உள்ளோம். உக்ரைன் மண்ணில் இருக்கும் எதிரிகளை அழிப்போம். துப்பாக்கியால் சுட்டு கொல்வோம். GLORY TO UKRAINE “

என கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.