சென்னை அருகே, போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்ததாக பாஜக பிரமுகர் உள்ளிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

89
Advertisement

சென்னை மண்ணடி பகுதியை சேர்ந்த சுல்தான் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் பாடியநல்லூர் பகுதியில்  23 சென்ட்  நிலத்தினை  விற்பனை செய்து தரும்படி நிலத்தின் உரிமையாளர்கள்  சுல்தானுக்கு பவர் கொடுத்துள்ளனர். இதனையடுத்து சில நாட்கள் கழித்து சுல்தான் அந்த இடத்தினை விற்பனை செய்வதற்காக அங்கு சென்றபோது பாஜக முன்னாள் ஓபிசி அணி மாநில செயலாளரும் கேஆர்வி என்று அழைக்கப்படும் மிளகப்பொடி வெங்கடேசன், மற்றும் சீனிவாசன் ஆகியோர் இது தங்களது நிலம் என்றும் இந்த நிலம் எங்களுக்கு சொந்தமானது என கூறி பத்திரத்தினை காட்டி மிரட்டி உள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சுல்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் போலியாக பத்திரம் பதிவு செய்து ஏமாற்றியது உறுதியானது. இதனை தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், ரெட்ஹில்ஸ் பகுதியில் தலைமறைவாக பாஜக பிரமுகர் வெங்கடேஷ் மற்றும் நரேஷ் குமார் ஆகியோரை கைது செய்தனர்.