எலன் மஸ்க்-க்கு டுவிட்டர் நிறுவனம் கெடு

300

டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான தொழிலதிபர் எலன் மஸ்க், 28ம் தேதி மாலைக்குள் டுவிட்டர் ஒப்பந்தத்தை 44 மில்லியன் டாலர் உடன்படிக்கையில் முடித்துவிட வேண்டும் என டுவிட்டர் நிறுவனம் கெடு விதித்துள்ளது. டுவிட்டரில் உள்ள போலி கணக்குகள் குறித்து உண்மையான தரவுகளை பொது வெளியில் ஆதாரத்துடன் வழங்காதவரை டுவிட்டர் ஒப்பந்தம் முன்னோக்கி செல்லாது என தெரிவித்திருந்த எலன் மஸ்க், ஒப்பந்தத்தில் இருந்ந்து பின் வாங்கினார்.

இதனையடுத்து, டுவிட்டர் நிறுவனம் எலன் மஸ்க் மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையில், போலி கணக்குகள் விவரம் வேண்டும் என்ற பெயரில் பொய்யாக காரணம் காட்டி, இந்த ஒப்பந்தத்தில் இருந்து எலன் மஸ்க் முயற்சிப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இதற்கிடையே, டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான தொழிலதிபர் எலன் மஸ்க், 28ம் தேதி மாலைக்குள் டுவிட்டர் ஒப்பந்தத்தை 44 மில்லியன் டாலர் உடன்படிக்கையில் முடித்துவிட வேண்டும் என்றும், மீறினால் சட்டப்படி வழக்கை சந்திக்க நேரிடும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.