Advertisement

இந்தோனேஷியாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கடல்நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.


இந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 7.4 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.


இந்த நிலநடுக்கத்தில் சில கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். தொடர்ந்து 20 முறை சிறு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதுடன் கடலின் நீர் 7 சென்டிமீட்டர் வரை உயர்ந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதனை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகளை அதிகாரிகள் துரிதப்படுத்தி வருகின்றனர்.