அழகுசாதன பொருட்கள் தயாரிப்பின் இருண்ட கதை! பகடைக்காயாகும் குழந்தைகள்

350
Advertisement

தங்களை அழகாக காட்டிக் கொள்ள பெண்கள் eye shadow, eye liner, compact powder போன்ற பலவிதமான அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவது வழக்கம்.

இப்படியான மேக்கப் பொருள்களில் பொதுவான உட்பொருளாக சேர்க்கப்படுவது மைக்கா.

பூமிக்குள் இருந்து கிடைக்கும் இயற்கை கனிமமான மைக்கா, அதன் பளபளப்பை அதிகரிக்கும் தன்மைக்காக உபயோகப்படுத்த படுகிறது. சுரங்கங்களில் இருந்து மைக்காவை எடுத்து வர குறுகலான சுரங்கபாதைகளுக்குள் செல்ல வேண்டும் என்பதால், இந்தப் பணியில் குழந்தைகள் உட்படுத்தப்படுகிறார்கள்.

சர்வதேச சந்தையில், மைக்கா ஏற்றுமதியில் முக்கிய இடம் வகிக்கும் பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் வாழும் மக்கள் இன்னும் வறுமையின் பிடியில் தான் இருக்கிறார்கள். 2021ஆம் ஆண்டு நிலவரப்படி இரு மாநிலங்களை சேர்ந்த 22,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் சுரங்கப்பணியில் நாளொன்றுக்கு ஐம்பது ரூபாய்க்கு வேலை பார்ப்பது தெரியவந்துள்ளது.

மொத்த விலை வியாபாரிகளால் இதே மைக்காவிற்கு ஒரு கிலோவிற்கு ஆயிரம் டாலர் வரை அமெரிக்காவில் பெற முடியும். சுரங்கவேலை செய்யும் குழந்தைகளுக்கு சுவாசப் பிரச்சினை, சரும பாதிப்புகள், உராய்வுகள் ஏற்படுவதுடன் உயிருக்கே ஆபத்தான சூழல் ஏற்படுவதும் வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது.

குழந்தைகள் பணியாற்றும் 90% மைக்கா சுரங்கங்கள் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் நிலையில், அனைத்து சுரங்கங்களையும் சட்டப்பூர்வமாக மாற்றும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. பெற்றோருக்கு நியாயமான வருவாயோடு வேலை கிடைத்தால், குழந்தைகள் கல்வி பெற்று எதிர்காலத்தை நோக்கி பயணிக்க முடியும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.