சேலத்தில், ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள கலப்பட சீரகம் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

454

சேலத்தில், ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள கலப்பட சீரகம் மற்றும் சோம்பை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் கிரீத்குமார் ராமன் லால் என்பவர்கள் சீரகம், சோம்பு, கடுகு ஆகியவற்றை சேமிக்கும் குடோனை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த குடோனில் கலப்படம் செய்யப்பட்டு சோம்பு சீரகம் விற்பனை செய்யப்படுவதாக சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் குடோனில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது 8 ஆயிரத்து 250 கிலோ சீரகம், 4ஆயிரத்து180 கிலோ சோம்பு மற்றும் கலப்படத்திற்கு பயன்படுத்த வைத்திருந்த வேதிப்பொருட்கள், செயற்கை வண்ண நிறமிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு 9 லட்சம் என்றும், உரிமையாளர்கள் மீது வழக்கு தொடரப்படும் எனவும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.