அமெரிக்காவில் கழிவறை கோப்பைக்குள் பாம்பு பதுங்கியிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

331

அமெரிக்காவில் கழிவறை கோப்பைக்குள் பாம்பு பதுங்கியிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அலபாமா மாகாணம் யூபாலா நகரில் உள்ள ஒரு வீட்டுக்குள் அழையா விருந்தாளியாக பாம்பு ஒன்று நுழைந்தது. இதை கண்டு பதறிப்போன குடும்பத்தினர் பாம்பை அடித்து விரட்ட முயன்றனர். ஆனால் அந்த பாம்பு அவர்களிடம் சிக்காமல் மாயமாய் மறைந்தது. இதையடுத்து அவர்கள் பாம்பு எங்கே போனது என வீடு முழுவதும் சல்லடை போட்டு தேடினர்.

அப்போது வீட்டின் கழிவறை கோப்பைக்குள் அந்த பாம்பு பதுங்கி இருப்பதை கண்டு அதிர்ந்து போயினர். கழிவறை கோப்பைக்குள் இருக்கும் பாம்பை எப்படி வெளியே எடுப்பது என்று தெரியாமல் அவர்கள் தவித்தனர். இதனையடுத்து அவர்கள் போலீசை தொடர்பு கொண்டு உதவி கேட்டனர். அதன் பேரில் விரைந்து சென்ற போலீசார் பாம்பை உயிருடன் மீட்டு காட்டுக்குள் விட்டனர்.